சிவகார்த்திகேயன்: 'கலக்கப்போவது யாரு' முதல் `டாக்டர்’ வரை - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர் சிவகார்த்திகேயன். இன்று (பிப்ரவரி 17, அவருடைய 35ஆவது பிறந்தநாள். சிவகார்த்திகேயன் கடந்து வந்த பாதை குறித்த ரீவைண்ட் இதோ!



  • திருச்சியில் கல்லூரியில் படிக்கும்போது தான் தனக்குள் இருந்த மிமிக்ரி கலைஞனை சிவா கண்டறிந்திருக்கிறார்.



  • எம்பிஏ படிப்பதற்காக சென்னை வந்தவர் நண்பர்களின் அறிவுரைப்படி 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அவருக்குள் இருந்த நகைச்சுவை உணர்வும், மிமிக்ரி கலையும் 'கலக்கப்போவது யாரு' டைட்டிலை அவருக்கு பெற்றுக் கொடுத்தது.



  • 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி தான் சிவா வாழ்க்கையின் திருப்புமுனை என்றே சொல்லலாம். ஆமாம், அந்த நிகழ்ச்சி மூலமாக விஜய் டிவி தொகுப்பாளராக அறிமுகமாகிறார். பின்னர் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார்.