ஹுபய் மற்றும் வூஹானில் கட்டுப்பாடுகள் தளர்வு

பீஜிங்: சீனாவின், ஹுபய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில், கடந்த ஆண்டு டிசம்பரில், கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது. இதையடுத்து, ஜனவரி 23ல், ஹுபய் மாகாணம் முற்றிலுமாக மூடப்பட்டது. மக்கள், வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது.

தற்போது, ஹுபய் மற்றும் வூஹானில், வைரஸ் தொற்று, கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து, அங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த, சீன அரசு முடிவு செய்துள்ளது. ஹுபய் மாகாணத்தை விட்டு வெளியேறிய மக்கள், இன்று முதல், தங்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட உள்ளனர்.


அடுத்த மாதம், 8 முதல், மேலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும், மக்கள் மற்ற நகரங்களுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவர் என்றும், சீன சுகாதாரத்துறை அதிகாரிகள், நேற்று அறிவித்தனர். சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதி பார்வையாளர்களுக்கு நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது.