கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் போலீஸ்காரர்

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி கார் மற்றும் டூவிலரில் வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீஸ் எஸ்.ஐ., ரஷீத், கையெடுத்து கும்பிட்டு, தயவு செய்து வெளியே வர வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ துவங்கியது. இதனையடுத்து, நேற்று(மார்ச் 24) மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது. அத்யாவசிய தேவையின்றி யாரும் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனாலும், இந்த உத்தரவை மதிக்காமல், சிலர் அற்ப காரணங்களை கூறி சாலையில் உலா வருகின்றனர்.